வியாபார கூட்டுப்பங்காளர்கள் தமது வர்த்தகத்தைப் பற்றி பேசுவதற்கும், வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும் வலைப்பதிவு மற்றும் அதுபோன்ற வேறு சமூக ஊடக தளங்களை பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர். அது தொடர்பான நிறுவனத்தின் கொள்கை மற்றும் வழிகாட்டல்கள் கீழ்காணும் வகையில் அமைந்துள்ளன. ஒரு குறிப்பிட்ட தளம் இங்கு இடம்பெறத் தவறியிருந்தால் அல்லது குறிப்பிடாமல் இருந்தால் இந்த கொள்கை அதனைக் கட்டுப்படுத்துவதாக கூறுவதற்கில்லை. எந்தவொரு அம்சம் தொடர்பாகவும் கொள்கையோ வழிகாட்டலோ இல்லாதிருப்பின் வியாபார கூட்டுப்பங்காளர்கள் இவ்விடயத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தமது தொழில்சார் நுண்ணறிவை பயன்படுத்த வேண்டும்.
1. தனிப்பட்ட வலைப்பதிவுகள், இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் தமது நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் மட்டுமன்றி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் கருத்துக்கள், அதாவது அவர்களது கருத்துக்கள் மட்டுமேயன்றி நிறுவனத்தின் கருத்துக்களினை பிரதிபலிக்கவில்லை என்ற பொறுப்புத்துறப்பினை தெளிவாக குறிப்பிட வேண்டும். உதாரணத்துக்கு "கூறப்படும் கருத்து மற்றும் நிலைப்பாடு எனது சொந்தக் கருத்து மற்றும் நிலைப்பாடாகும்: அவை Global Lifestyle Lanka (தனியார்) நிறுவனத்தின் கருத்துக்களை எந்தவகையிலும் பிரதிபலிக்காது"
2. நீங்கள் உங்களை சரியாகவும் தெளிவாகவும் பிரதிநிதுத்துவப்படுத்த வேண்டும். நிறுவனத்துடனான உங்கள் உறவை வியாபாரக் கூட்டுப்பங்காளர் என்று குறிப்பிட வேண்டும். ஊழியர், முகவர் என்று வேறு வகையில் உரிமைகோரக்கூடாது.
3. நிறுவனத்தின் வர்த்தகக் குறியீடு, வர்த்தக பெயர், சேவைக் குறியீடு, இலச்சினை அல்லது முத்திரைப்பெயர் ஆகியவற்றை எந்தவொரு சமூக ஊடகத் தளத்திலும் பாவனைப் பெயராக பயன்படுத்தவோ அல்லது பிரசுரம் செய்யவோ கூடாது.
4. உங்கள் வலைப்பின்னல், இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களின் சிறப்புக் குறிப்புக்களில் வழங்கும் தகவல்கள் Global Lifestyle இன் கொள்கைகளும் மற்றும் நடைமுறைகளும் (கொள்கைகளும் மற்றும் நடைமுறைகளும் உறுப்புரை 11.03, 11.04, 11.06 ஆகியவற்றைப் பார்க்கவும்) நிறுவனத்தின் கொள்கையுடன் இணங்கிப்போகும் வகையிலும் அதற்கு அமைவாகவும் இருக்க வேண்டும். அதேவேளை ஏனைய வலைப்பின்னல்கள், சமூகவலைப்பின்னல் தளங்கள் ஆகியவற்றில் போடப்படும் கருத்துக் குறிப்புகளுக்கும் இது எற்புடையதாகும்.
5.வியாபார கூட்டுப்பங்காளராக உங்களை இனங்காட்டுவதன் மூலம் நீங்கள் உங்களை இனங்காட்டுவதுடன் உங்கள் வர்த்தக பண்புகள் மற்றும் நிறுவனத்தின் விழுமியங்கள் ஆகியவற்றையும் இனங்காட்டுகிறீர்கள். எனவே உங்கள் இணையத்தள நடவடிக்கையானது நிறுவனம், அதன் பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவை தொடர்பாக மற்றவர்களின் பார்வையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அதனால் உருவங்கள் குறிப்புகள் மற்றும் கருத்துக்கள் மூலமான செயற்பாடுகளின்போது அவை உங்களையும் நிறுவனத்தையும் பிரதிபலிக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டியது முக்கியமானது.
இணையத்தில் எந்தவொரு கருத்தையும் இடும்போது கீழ்க்காணும் வழிகாட்டல்களுக்கு அமைவாக நடந்துகொள்ள வேண்டும்:
• நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் காணப்படும் உரைப்பகுதியை மட்டுமே நீங்கள் பயன்படுத்தவேண்டும்.
• நிறுவனத்தின் உரைப்பகுதியை தவிர்ந்த வேறு உள்ளடக்கங்களை நீங்கள் உங்கள் இணையத்தளத்திலோ அல்லது சமூக வலைப்பின்னல் குறிப்புகளிலோ பயன்படுத்தக்கூடாது.
• அனைத்து உள்ளடக்கங்களினதும் எழுத்துக்கள் சரி பிழை பார்க்கப்பட வேண்டும்.
• தவறான வழிக்கு இட்டுச் செல்லும் அல்லது ஏமாற்றும் செயட்பாடுகள் மற்றும் அதுபோன்ற தகவல்கள் வழங்கல் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன.
• பதிப்புரிமை சட்டங்களுக்கு மதிப்பளியுங்கள். அத்துடன் தேவைப்படும் இடங்களில் தகவல் வளங்களின் பெயரைக்குறிப்பிடுங்கள்.
• திட்டும் மொழிப் பிரயோகம் தவிர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.
• தனிப்பட்ட ரீதியிலான தாக்குதல்கள் தவிர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.
6. அனைத்து வியாபார கூட்டுப் பங்காளர்களும் Global Lifestyle Lanka மற்றும் அதன் பொருட்கள் தொடர்பாக எந்தவொரு கருத்தையும் வெளியிடும்போது Global Lifestyle Lanka நிறுவனத்தின் வியாபார கூட்டுப் பங்காளர் என்று தன்னை அடையாளம் காட்டிக் கொள்வதுடன் நிறுவனத்தின் வியாபார கூட்டுப்பங்காளர் என்ற தனது உறவையும் குறிப்பிட வேண்டும்.
7. இணையத்தில் சான்றிதழ்களை வெளியிடும் வியாபார கூட்டுப் பங்காளர்கள் அவற்றின் உண்மைத் தன்மையை பேணுவதுடன் அவற்றின் பெறுபேறு சரியாக அமையும் வகையிலும் செயற்பட வேண்டும்.
உதாரணம் 1: Insta White கிரீம் 3 நாட்களில் சருமத்தை வெண்மையாக்கும் ' என்ற கூற்று நேர்மையான கருத்தைக் கூற முற்பட்டாலும் கூட அது சரியான பெறுபேற்றை தரும் என்று அல்ல. எனவே அவ்வாறான கூற்று இணையத்தில் போடப்படும் போது அது தற்போதைய வழிகாட்டல்களை மீறும் வகையில் அமைகிறது. அல்லாதவிடத்து உங்கள் கூற்றை உறுதி செய்யும் ஆய்வுபூர்வமான ஆதாரங்கள் உங்கள் கூற்றுடன் இணைக்கப்படவேண்டும்.
உதாரணம் 2: ‘Global Lifestyle மூலம் நான் ஒரு மாதத்தில் ரூபா 567,000 சம்பாதிக்கிறேன்' என்ற இந்தக் கூற்று உண்மையாக இருக்கலாம். ஆனால் அதன் பெறுபேறு உண்மையானதாக ஆதாரபூர்வமாக உறுதிசெய்யப்படவில்லை. எனவே இந்தக்கூற்று தற்போதைய வழிகாட்டலை மீறுவதாகவே அமைகிறது. வருமானத்தைப் பற்றிப் பேசும்போது கொள்கைகளும் மற்றும் நடைமுறைகளும் 11.02 என்ற உறுப்புரையை வழிகாட்டலாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
8. பணம் செலுத்தும் விளம்பர தளங்களில் நிறுவனத்தின் இலச்சினை அல்லது வர்த்தகக் குறியீடு பயன்படுத்தக்கூடாது. அனைத்துத் தொடர்பு தொகுப்புகளும் வியாபார கூட்டுப்பங்காளரின் சொந்த இணையத்தளத்துக்கு திருப்பப்பட வேண்டுமே தவிர நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்துக்கு அல்ல.
9. உங்களுக்கு ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் அதுபற்றி கலந்தாலோசிக்க நிறுவனத்தின் அதிகாரபூர்வ சமூக ஊடக அலைவரிசைகளான www.globallifestyle.lk அல்லது மூன்று மொழிமூலமும் தொடர்புகொள்ளக்கூடிய எங்கள் வாடிக்கையாளர் சேவை நிலையத்தின் (CSG) தொலைபேசி எண்கள் என்பவற்றினை பயன்படுத்தலாம். இவை தவிர்ந்த ஏனைய சமூக ஊடகங்களில் உங்கள் முறைப்பாட்டை பகிரங்கமாக தெரிவித்தால் நிறுவனத்தினால் உங்கள் பிரச்சினையை தீர்க்க முடியாமல் போய்விடும். உங்கள் பிரச்சினையை வேறு ஊடகங்களில் பார்ப்போருக்கு அவை தீர்க்கப்பட்டு விட்டனவா என்பது பற்றி எதுவும் தெரியாது. எனவே உங்கள் பிரச்சினை தீர்க்கப்படாமலேயே உள்ளது என்று பிறர் தவறான அபிப்பிராயத்துடன் இருக்க நேரிடும்.