Global Lifestyle Lanka வியாபாரத்தில் தொழில் முறை சார்ந்த சந்தைப்படுத்தல் நடைமுறையை பின்பற்றுவது அவசியம். நேர்மையை கடைபிடித்தல் மிக முக்கியம் ஆகவே எங்கள் வியாபார பங்காளிகள் (BA's) Global Lifestyle Lanka நிறுவனத்துடனும், அவர்களின் நெட்ஒர்க் மற்றும் வாடிக்கையாளர்களுடனும் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் போது எப்போதுமே விசுவாசத்துடனும், நேர்மையாகவும் நடந்துகொள்வது அவசியம். எங்களுக்கென்று "தொழில் கோட்பாடுகள்" மற்றும் "கொள்கையும் செயன்முறைகளும்" மூன்று மொழிகளிலும் பொது தளத்தில் காணப்படுகிறது. எங்கள் BA அனைவரும் அதன்படி இந்த வியாபாரத்தை மேற்கொள்வோம் என அந்த பாத்திரங்களில் கைச்சாத்திட்டு, அதன்பிறகு ஒழுங்குநெறியை பின்பற்றி செயற்படுவது அவசியம்.
Global Lifestyle Lanka பின்புலத்தில் இயக்குநர் குழுமம், சட்ட வல்லுநர்கள், நேரடி விற்பனை வல்லுநர்கள் இருந்து எங்கள் BA க்களுக்கு தொழில் சார்ந்த ஆலோசனைகளும், விநியோக வழிகாட்டுகள் போன்றவற்றை வழங்குவார்கள். இந்த நேரடி விற்பனை துறையானது காலத்துக்கு காலம் நிறுவமுடியாத விநியோக திட்டங்களைக்கொண்ட தவறான கூட்டமைப்புக்களால் பாதிக்கப்படுகிறது, குறிப்பாக எங்கள் நாட்டில் இந்த துறை சார்ந்த ஒழுங்குமுறை விதிகள் இல்லாததுதான் காரணம். இதற்கான தீர்வாக Global Lifestyle Lanka பரிந்துரைப்பது, இந்த அரசாங்கம் இந்த துறை சார்ந்து கடுமையான ஒழுங்குமுறை விதிகள் அமுல்படுத்துவதன் மூலம் நேர்மையான நேரடி விற்பனை நிறுவனங்களை ஊக்குவிக்கலாம். Global Lifestyle Lanka நாட்டில் எந்த பகுதியில் வியாபாரத்தில் ஈடுபடும் போதும் எப்போதும் தெள்ளத்தெளிவாகவும், சட்டப்படியும் அதன் செயற்பாடுகளை மேற்கொள்ளும் மற்றும் BA அனைவருக்கும் தொடர்ச்சியாக இந்த மனப்போக்கை கடைபிடிக்கச்சொல்லி உத்தரவிடும்